/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர்கள் கவுரவிப்பு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
/
கவுன்சிலர்கள் கவுரவிப்பு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
கவுன்சிலர்கள் கவுரவிப்பு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
கவுன்சிலர்கள் கவுரவிப்பு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
ADDED : ஜன 26, 2024 01:33 AM
கோவை;கடந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட, 10கவுன்சிலர்கள் கவுரவிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அறிவிப்பு இல்லாதது கடமையாற்றும் கவுன்சிலர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.
கோவை மாநகராட்சியில், 100 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் வார்டு பக்கம் தலைகாட்டுவதில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்தாலும், பெரும்பாலான கவுன்சிலர்கள் காலையில் துாய்மை பணியில் துவங்கி நம்பி ஓட்டளித்த மக்களுக்காக வார்டுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பொது மக்களுக்கு ஆற்றும் சேவையை பாராட்டும் விதத்தில் சிறந்த கவுன்சிலர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்தாண்டு நடந்த குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர்
ஆனால், இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறந்த கவுன்சிலர்கள் கவுரவிப்பு குறித்து நேற்று வரை எந்த அறிவிப்பும் மாநகராட்சி தரப்பில் வெளியிடப்படவில்லை.
கவுன்சிலர்கள் கூறுகையில்,'இந்தாண்டு அறிவிப்பு வராதது களப்பணியாற்றும் கவுன்சிலர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் கிடைக்கும் பாராட்டும் எங்களுக்கு மேலும் பணிபுரிய உத்வேகம் தரும். அடுத்து வரும் விழாக்களிலாவது எங்களை கவுரவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றனர்.

