/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.35 கோடிக்கு மாடு வர்த்தகம்
/
ரூ.1.35 கோடிக்கு மாடு வர்த்தகம்
ADDED : அக் 14, 2025 10:18 PM
-- நமது நிருபர் -
அமராவதிபாளையம் கால்நடைச்சந்தைக்கு தீபாவளியையொட்டி, மாடு, எருமை, காளை, கன்றுகுட்டி வரத்து அதிகமாக இருந்தது.
கடந்த வாரம், 703 கால்நடைகள் வந்தன; நேற்றுமுன்தினம், 879 கால்நடைகள் வந்தன. கன்றுகுட்டி, 2,500 - 3,500 ரூபாய்; பசு மாடு, 29 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்; எருமை, 30 ஆயிரம் - 33 ஆயிரம்; காளை மாடு, 25 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய் என விற்கப்பட்டது.
மாடுகள், 3,000 ரூபாய்; எருமை, 2,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது; கன்றுக்குட்டி விலையில் மாற்றமில்லை. கரூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்கள், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். மாடுகள் வர்த்தகம், ரூ.1.35 கோடிக்கு நடந்ததாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

