/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடிங், ரோபோட்டிக்ஸ் கற்பிக்கும் கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி
/
கோடிங், ரோபோட்டிக்ஸ் கற்பிக்கும் கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி
கோடிங், ரோபோட்டிக்ஸ் கற்பிக்கும் கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி
கோடிங், ரோபோட்டிக்ஸ் கற்பிக்கும் கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி
ADDED : செப் 27, 2025 01:05 AM
இ டிகரையில் உள்ள கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ப்ரீ கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்பிக்கப் படுகிறது.
பள்ளி தலைவர் தினேஷ்குமார் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியை முன்னிட்டு, அவர்களுக்கு முதல் வகுப்பிலிருந்தே கோடிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் கற்பிக்கப்படுகிறது. மேலும், ஆறாம் வகுப்பு முதல் நீட், ஜெ.இ.இ மற்றும் பவுண்டேஷன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2026-27 கல்வியாண்டிலிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய ஹாஸ்டல் துவக்கப்படவுள்ளது. இடிகரை சுற்றுப்பகுதியில் 5 கி.மீ.,க்குள் இருந்து பள்ளி வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த, நவீன புல் மைதானம் அமைக்கப்பட்டு, கால்பந்து மற்றும் கிரிக்கெட்டிற்கான பயிற்சி நடக்கிறது.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன உறுதியை வலுப்படுத்த, சிலம்பம், ஜும்பா நடனம் மற்றும் கராத்தே வகுப்புகளும் பள்ளியில் நடத்தப்படுகிறது. கல்வி, விளையாட்டு, பண்பாடு அனைத்திலும் மாணவர்கள் முன்னேறுவதற்கான சூழலை எங்கள் பள்ளி வழங்குகிறது. மாணவர் சேர்க்கைக்கு, 99761 53611, 99654 11155 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

