அரசு பஸ் மோதி ஐயப்ப பக்தர் பலி
குன்னத்தூராம்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 79. இவர் நேற்று காலை 4:45 மணிக்கு குன்னத்தூராம் பாளையத்திலிருந்து அன்னூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவிநாசி ரோட்டில் நாகமாபுதூர் அருகே செல்லும்போது, திருப்பூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது.
இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். அன்னூர் போலீசார், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நகை கொள்ளையடித்தவர் கைது
சூலூர் அடுத்த செல்வராஜபுரம், ராமையா நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் வெளிநாட்டில் வேலை செய்வதால், மனைவி விஜயலட்சுமி, இரு மகன்களுடன் வசித்து வந்தார்.
கடந்த, 11 ம்தேதி மதியம் விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த தொழிலாளி பாபு, பெண்ணை கட்டி போட்டு விட்டு, 20 சவரன் நகை, மற்றும் செல்போனை கொள்ளையடித்து தப்பினார்.
இந்நிலையில், போலீசார் நீலம்பூர் பகுதியில், பாபுவை பிடித்து கைது செய்தனர்.

