கஞ்சா விற்ற மூவர் கைது
பெரியநாயக்கன்பாளையம், மதுவிலக்கு போலீசார், கருமத்தம்பட்டி நான்கு ரோடு பாலத்தின் கீழ், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்தர் பஸ்வான், 41. என்பவரை கைது செய்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* கோவில்பாளையம், கவுசிகா நதி பாலத்தின் கீழ் நடத்திய சோதனையில், ஆயிமாபுதூரை சேர்ந்த ராமச்சந்திரன், 27. என்பவர் 200 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார்.
* குரும்பபாளையம் அடுத்த காபி கடை பகுதியில், 150 கிராம் கஞ்சாவுடன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அழகர்சாமி, 24. என்பவர் கைது செய்யப்பட்டார். மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
லாரி டிரைவரை தாக்கியவர்கள் கைது
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 43, லாரி டிரைவர். இவர் ஊட்டி ரோடு மைதானம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த போது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அல்வா கடை வைத்துள்ள அசரப், 24, பழைய இரும்பு கடை வைத்துள்ள பர்கத்துல்லா, 28, ஆகியோர் மது போதையில் வழிமறித்து, மூர்த்தியை கெட்ட வார்த்தையால் திட்டியும், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்தும் அவரை தாக்கி தகராறில் ஈடுபட்டனர்.
இதில் மூர்த்திக்கு தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தகராறில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.----
மாணவியை கடத்திய டிரைவர் கைது
அன்னூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி. அன்னூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். குன்னத்தூராம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார், 26. என்பவர் அந்த பள்ளியில் முன்பு டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர், அந்த 16 வயது சிறுமிக்கு, ஆசை வார்த்தை கூறி, சென்னைக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்,
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், அன்னூர் போலீசார் சென்னை சென்று, சிறுமியை கடத்திய சுரேஷ்குமாரை கைது செய்து சிறுமியை மீட்டனர். வழக்கு பதிவு செய்து இருவரையும் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.