/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்பாட்டு திருவிழா: கல்லூரியில் கலை நிகழ்ச்சி
/
பண்பாட்டு திருவிழா: கல்லூரியில் கலை நிகழ்ச்சி
ADDED : ஜன 26, 2024 12:33 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்லுாரியில், முத்தமிழ் விழா, பண்பாட்டுத்திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி மற்றும் கலை அறிவியல் கல்லுாரி, பொள்ளாச்சி, உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், முத்தமிழ் விழா, உழவர் திருநாள் விழா, பண்பாட்டுத் திருவிழா மற்றும் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.
ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் செயலர் அருள்மொழி தலைமை வகித்தார். தலைவர் ரத்தினம் முன்னிலை வகித்தார். தாளாளர் மகேந்திரன் வரவேற்றார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பொள்ளாச்சி தமிழிசை சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், உடுமலை தமிழிசை சங்க உறுப்பினர் மணி, விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி தாளாளர் மூர்த்தி ஆகியோர் பேசினர்.
கவிதை, பேச்சு, கோலம், நடனம், நாடகம், சமையல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர்.

