/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கான கால்பந்து: கார்மல் கார்டன் பள்ளிக்கு கோப்பை
/
மாணவர்களுக்கான கால்பந்து: கார்மல் கார்டன் பள்ளிக்கு கோப்பை
மாணவர்களுக்கான கால்பந்து: கார்மல் கார்டன் பள்ளிக்கு கோப்பை
மாணவர்களுக்கான கால்பந்து: கார்மல் கார்டன் பள்ளிக்கு கோப்பை
ADDED : ஜன 26, 2024 01:39 AM
கோவை;பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து இறுதிப்போட்டியில் சி.எஸ்., அகாடமி அணியை வீழ்த்தி கார்மல் கார்டன் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
ஸ்ரீ கோபால் நாயுடு கல்வி அறக்கட்டகளை சார்பில், 'ராவ் பகதுார் ஸ்ரீ கோபால் நாயுடு நினைவு கோப்பைக்கான' மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கோபால் நாயுடு பள்ளி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் 19 பள்ளிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இதன் இறுதிப்போட்டியில் கார்மல் கார்டன் மற்றும் சி.எஸ்., அகாடமி பள்ளி அணிகள் மோதின.
இதில் அசத்தலாக விளையாடிய கார்மல் கார்டன் பள்ளி அணி மாணவர்கள் 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோபால் நாயுடு கல்வி அறக்கட்டகளையின் அறங்காவலர் ரவி சாம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். கோபால் நாயுடு பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தர் ராஜ் உடனிருந்தார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வித்துறையினர் செய்திருந்தனர்.

