/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்த ரோடு மக்கள் திக்திக் பயணம்
/
சேதமடைந்த ரோடு மக்கள் திக்திக் பயணம்
ADDED : ஜூன் 09, 2025 09:58 PM
கிணத்துக்கடவு; சிங்கையன்புதூர் முதல் நெ.10 முத்தூர் வரையான ரோடு சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் முதல் நெ.10 முத்தூர் வரையான, 3 கி.மீ., ரோட்டில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
மழை காலத்தில், இவ்வழியில் உள்ள கல்குவாரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் தனியார் கம்பெனி கழிவு நீர் அனைத்தும், ரோட்டில் வழிந்தோடுகிறது. இந்நிலையில், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வழியில் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இங்கு அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைத்து, குவாரியில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தனியார் கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.