/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசாணை வெளியாகியும் வரன்முறை செய்ய முடியவில்லை; மக்கள் தவிப்பு
/
அரசாணை வெளியாகியும் வரன்முறை செய்ய முடியவில்லை; மக்கள் தவிப்பு
அரசாணை வெளியாகியும் வரன்முறை செய்ய முடியவில்லை; மக்கள் தவிப்பு
அரசாணை வெளியாகியும் வரன்முறை செய்ய முடியவில்லை; மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 07, 2025 11:32 PM
அன்னூர்: 'அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளலாம் என, அரசாணை வெளியாகி 22 நாட்கள் ஆகியும், விண்ணப்பிக்க முடியவில்லை' என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2016ம் ஆண்டு அக்., 20ம் தேதிக்கு முன்னர் அமைக்கப்பட்ட மனை பிரிவில் (லே-அவுட்) குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனை பிரிவில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகளையும், வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்னும் திட்டம், 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 2024ம் ஆண்டு வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் அவகாசம் அளிக்க கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா கடந்த மே 15ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளை வரன்முறை படுத்தும் திட்டம், எந்தவித மாற்றமும் இன்றி, இணைய வழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ள மேலும் 12 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது. 2026 ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து மனை உரிமையாளர்கள் கூறுகையில், 'அரசாணை வெளியிட்டு 22 நாட்களாகி விட்டது.
ஆனால் அந்த இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. தினமும் முயற்சி செய்து வருகிறோம். 22 நாட்களாக காத்திருக்கிறோம்.
அரசு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்படி வழி செய்ய வேண்டும். மனைகளை வரன்முறை செய்தால்தான், உள்ளாட்சி அமைப்புகளில் அங்கீகாரம் பெற முடியும். வங்கி கடன் பெற முடியும். கட்டுமான பணிகளை துவக்க முடியும்' என்றனர்.