/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரோஜோன் மாலில் டைனோசர் உலகம்!
/
புரோஜோன் மாலில் டைனோசர் உலகம்!
ADDED : செப் 29, 2025 12:41 AM

கோவை; குழந்தைகள், பெரியவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் 'புரோஜோன் டைனோசர் வேர்ல்டு', கோவை புரோஜோன் மாலில் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளை எங்கு அழைத்து செல்வது என்று பெற்றோருக்கு குழப்பம். இதற்கு தீர்வாக, டைனோசர் உலகை அறிமுகப்படுத்துகிறது கோவை புரோஜோன் மால். இன்று துவங்கியுள்ள இந்த டைனோசர் வேர்ல்டு, அக்., 20ம் தேதி வரை குழந்தைகள், பெரியவர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறது. இந்த டைனோசர் வேர்ல்டுக்குள் நுழைந்தாலே, பல்வேறு டைனோசர் உருவங்களை காண முடியும். ஒவ்வொன்றும் பிரமாண்டத்தையும், பிரமிப்பையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. நிஜ டைனோசர்கள் போல் ஒவ்வொன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. அமைதியாக இருக்கும் இந்த டைனோர்கள், அருகில் சென்றதும் அசைந்து, நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
என்ன... கிளம்பிட்டீங்களா?

