/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி, எந்த ரோட்டையும் தோண்டாதீங்க! மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கெஞ்சல்
/
இனி, எந்த ரோட்டையும் தோண்டாதீங்க! மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கெஞ்சல்
இனி, எந்த ரோட்டையும் தோண்டாதீங்க! மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கெஞ்சல்
இனி, எந்த ரோட்டையும் தோண்டாதீங்க! மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கெஞ்சல்
ADDED : ஜூன் 27, 2025 11:05 PM
கோவை; கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம், விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது; மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசுகையில், ''விளையாட்டு அரங்கங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்னும் பாதி ரோடு கூட போட முடியாத நிலை இருக்கிறது. புதிதாக ரோடு தோண்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. தோண்டிய குழிகளை நன்றாக மூடிய பிறகே அடுத்த வேலையை ஆரம்பிக்க வேண்டும்,'' என்றார்.
கவுன்சிலர் சிவா பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலுக்கு மக்களிடம் ஓட்டுக் கேட்டுச் செல்வதற்கு சிரமம் ஏற்படும். அதற்குள் அனைத்து இடங்களில் எப்படி ரோடு போடுவீர்கள் எனத் தெரியவில்லை. துாய்மை பணியாளர்கள் ஓய்வு பெற்றால், புதிதாக நியமிக்க வேண்டும்,'' என்றார்.
மேயர் பதிலளிக்கையில், ''வார்டுக்கு ஆறு பேர் வீதம் நியமிக்க வலியுறுத்தியுள்ளேன்,'' என்றார்.
தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி கூறுகையில், ''தெற்கு மண்டலத்தில் ரோடு படுமோசமாக இருக்கிறது. தெருவிளக்குகள் எரிவதில்லை. 8 வார்டுகளில் குடிநீர் பிரச்னை இருக்கிறது. 10 - 15 நாட்களாகிறது. மழை பெய்கிறது; ரோட்டில் வீணாகச் செல்கிறது; வீட்டுக்கு மட்டும் வருவதில்லை. சொத்து வரி செலுத்தாவிட்டால் அபராதம் போடுகிறீர்கள் என மக்கள் கூறுகின்றனர்,'' என்றார்.
மத்திய மண்டல தலைவர் மீனா பேசுகையில், ''அரசு மருத்துவமனைக்கு எதிரே வாகனங்கள் இலவசமாக நிறுத்த அனுமதிக்க வேண்டும். கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடக்கிறது. மாநகராட்சி விருந்தினர் மாளிகையை சீரமைக்க, ரூ.50 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது; பணி முழுமையாக முடியவில்லை.
ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு அந்த கட்டடத்தில் என்ன வேலை செய்கிறீர்கள். தற்போது பேய் பங்களா போல் இருக்கிறது. பூங்காக்கள் பராமரிக்க ஒதுக்கும் நிதி குறைவாக இருக்கிறது,'' என்றார்.