/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் சிறை
/
டிரைவர் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள் சிறை
ADDED : செப் 18, 2025 10:39 PM

கோவை, செப். 19-
டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாலகுமார், 33; திருமணம் ஆகாத இவர், கோவை, கவுண்டம்பாளையம், காமராஜ் நகர் மூன்றாவது வீதியில், தனது தாயாருடன் வசித்து வந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் டிரைவராக பணியாற்றினார்.
பாலகுமாரும், கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்த தொழிலாளிகள் நாகராஜ்,27, சிவா,26, ஆகியோரும் நண்பர்கள். இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. 2017, பிப். 7ல், கவுண்டம்பாளையம் - இடையர்பாளையம் ரோட்டில் பாலகுமார் நடந்து வந்தபோது, அவரை வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்ட னர். பாலகுமார் பணம் கொடுக்க மறுத்ததால், இருவரும் ஆத்திரமடைந்து, கத்தியால் குத்திகொலை செய்து விட்டு தப்பினர். துடியலுார் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது, கோவை எஸ்.சி. - எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும், ஆயுள் சிறை, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பாலசுப்ரமணியன் ஆஜரானார்.