/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்களில் இருந்து சிதறும் பிளாஸ்டிக், அட்டை பெட்டிகள் வாகன ஓட்டுநர்கள் அச்சம்
/
வாகனங்களில் இருந்து சிதறும் பிளாஸ்டிக், அட்டை பெட்டிகள் வாகன ஓட்டுநர்கள் அச்சம்
வாகனங்களில் இருந்து சிதறும் பிளாஸ்டிக், அட்டை பெட்டிகள் வாகன ஓட்டுநர்கள் அச்சம்
வாகனங்களில் இருந்து சிதறும் பிளாஸ்டிக், அட்டை பெட்டிகள் வாகன ஓட்டுநர்கள் அச்சம்
ADDED : மார் 24, 2025 10:55 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், வாகனங்களில் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது, அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பைகள் பறந்து விழுவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
கேரளா மாநிலத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பொள்ளாச்சி உள்ளது. இவ்வழியாக தினமும், ஆயிரக்கணகக்கான வாகனங்களில், காய்கறிகள், பொருட்கள், கோழி போன்றவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த வாகனங்களில் பொருட்களை மூடி எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் போதுமான பாதுகாப்புடன் எடுத்துச் செல்வதில்லை. இவை ரோட்டில் பறந்து விழுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
வாகனங்களில், ஜல்லிக்கற்கள் போன்றவை எடுத்துச் செல்வோர், அவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதில்லை. சமீபத்தில் கூட பொள்ளாச்சி தபால் அலுவலகம் அருகே லோடு சரிந்து ரோட்டில் ஜல்லிக்கற்கள் கொட்டியது.
இதுபோன்று, பொருட்களை எடுத்து வருவோர் போதிய பாதுகாப்புடன் எடுத்து வருவதில்லை. மண்ணும் காற்றில் பறந்து கண்களை பதம் பார்க்கின்றன.
வாகனங்களில் இருந்து பிளாஸ்டிக், அட்டை பெட்டி போன்றவை பறந்து ரோட்டில் விழுகின்றன. திடீரென விழுவதால் பின்னால் வருவோருக்கு இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து பொருட்களை எடுத்துச் செல்வோருக்கு அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கி பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.