/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல உரிமை: பேரணியில் அறிவுறுத்தல்
/
ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல உரிமை: பேரணியில் அறிவுறுத்தல்
ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல உரிமை: பேரணியில் அறிவுறுத்தல்
ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல உரிமை: பேரணியில் அறிவுறுத்தல்
ADDED : ஜன 26, 2024 12:51 AM

சூலுார்;'தேர்தல்களில் ஓட்டளிப்பது கடமை மட்டுமல்ல. ஒவ்வொருவரின் உரிமையும் ஆகும்' என, சூலுாரில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் அறிவுறுத்தப்பட்டது.
ஆண்டுதோறும், ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சூலுார் தாலுகா அலுவலகம் மற்றும் சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
முன்னதாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவியர் மற்றும் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மண்டல துணை தாசில்தார் மணிகண்டன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். மார்க்கெட் ரோடு, திருச்சி ரோடு, வழியாக பேரணி, மீண்டும் தாலுகா அலுவலகத்தில் முடிந்தது.
வாக்களிப்பது கடமை மட்டுமல்ல; உரிமை. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்டு வாக்களிக்கக் கூடாது. வாக்களிப்பதை கவுரவமாக கருதவேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, பேரணியில் மாணவர்கள் ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
வருவாய் ஆய்வாளர்கள் கங்கா ராஜ், அம்பிகா, வி.ஏ.ஓ., சுஜி, எஸ்.எஸ்.ஐ., ரவி மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் தீபக் ரிஷாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

