/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சில்லறை தருவதாக கூறி 'எஸ்கேப்' ஆனவர் கைது
/
சில்லறை தருவதாக கூறி 'எஸ்கேப்' ஆனவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவை, கரும்புக்கடை, சாரமேடு பகுதியில் சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான டிபார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளது.
இரு நாட்களுக்கு முன் கடைக்கு வந்த ஒருவர், பொருட்களை வாங்கினார். பின் கல்லாவிலிருந்த சம்சுதீனிடம், தான் ஐந்து, 10, 20 ரூபாய் நோட்டுகள் தருவதாக கூறி, 22 ஆயிரம் ரொக்கத்தை வாங்கி, 'எஸ்கேப்' ஆனார். சம்சுதீன் கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் 'சி.சி.டிவி' கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து, செஞ்சேரிமலையை சேர்ந்த நவாஸ்கான், 47 என்பவரை கைது செய்தனர்.