/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழி கழிவால் விவசாயிகள் பாதிப்பு
/
கோழி கழிவால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2025 10:46 PM

அன்னுார்; செங்காளிபாளையத்தில், லோடு கணக்கில், ஈரத்துடன், கோழி கழிவு கொட்டப்படுவதால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
குப்பேபாளையம் ஊராட்சி, செங்காளி பாளையத்தில், ஊருக்கு மேற்கே, ஒரு தோட்டத்தில், தண்ணீர் கலந்து, ஈரத்துடன் கோழி எரு கழிவு லோடு கணக்கில் கொட்டப்படுகிறது. அதிகமாக மகசூல் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில், ஒரு தோட்டத்தில் கொட்டப்பட்டு குவிந்து உள்ள கழிவால், சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் ஈக்கள் மொய்க்கின்றன. கடும் துர்நாற்றம் வீசுகிறது.
'வறண்ட கோழி எருவை கொண்டு வந்தால், அதனால் பாதிப்பு இல்லை. தற்போது தண்ணீருடன் ஈரத்துடன் கொட்டப்படும் கழிவால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.