/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல் சண்டைக்காக களமிறங்கிய விவசாயிகள்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு
/
சேவல் சண்டைக்காக களமிறங்கிய விவசாயிகள்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு
சேவல் சண்டைக்காக களமிறங்கிய விவசாயிகள்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு
சேவல் சண்டைக்காக களமிறங்கிய விவசாயிகள்; போலீசார் தடுத்ததால் பரபரப்பு
ADDED : ஜன 10, 2024 12:54 AM
பொள்ளாச்சி;சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி சேவலுடன் மனு கொடுக்க பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயியை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், சேவலுடன் நேற்று பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். காரில் இருந்து சேவலை எடுக்க முற்பட்ட போது, போலீசார் தடுத்து நிறுத்தினர். மனு கொடுக்க சேவலுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு போலீசார், 'மனுவை கொடுக்கலாம்; சேவலுடன் செல்ல வேண்டாம்,' என்றார். இதையடுத்து, விவசாயிகள் மட்டும் சென்று மனு கொடுத்தனர்.
விவசாயி பாலசுப்ரமணியன் கூறியதாவது:
இந்தியாவில் சேவல் சண்டை என்பது பாரம்பரியமான விளையாட்டு, உறவுகளுடன் சேர்ந்து விளையாடும் சேவல் சண்டையை தமிழக அரசு புறக்கணிக்கிறது. பொங்கல் மற்றும் திருவிழா காலங்களில் சேவல் சண்டை நடத்தி, குடும்பத்துடன் உணவை சாப்பிடுகிறோம்.
சேவல் சண்டைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி தந்தும், தமிழக அரசு புறக்கணிக்கிறது. சேவல் வளர்ப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறுகிறது.
ஒரு சேவல், எட்டு கிலோ வரையிலும் வளரக்கூடிய தன்மை உடையது. இதன் விலை, 20 ஆயிரம் ரூபாயாகும்.
தமிழக அரசுக்கு சேவல் சண்டையை அனுமதிக்க வேண்டும் என, மனுக்கள் அனுப்பியும் பலன் இல்லை. தமிழக அரசு சேவல் சண்டையை அனுமதித்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்.
இதற்காக, சேவலுடன் மனு கொடுக்க சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தோம். ஆனால், நுழைவுவாயிலில் தடுத்து நிறுத்தி விட்டனர். அனுமதி தராவிட்டால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு, சப் - கலெக்டர் அலுவலகம் முன் கண்டன போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

