/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் வளர்த்து விற்கலாம்! ஊராட்சி ஒன்றியம் அழைப்பு
/
மீன் வளர்த்து விற்கலாம்! ஊராட்சி ஒன்றியம் அழைப்பு
ADDED : பிப் 23, 2024 10:46 PM
அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், ஐந்து குளங்களில், மீன் வளர்த்து, விற்பனை செய்ய, ஊராட்சி ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு பருவ மழை பெய்தது. இந்த மழையில் கஞ்சப்பள்ளியில், 85 ஏக்கர் குளம் முழுமையாக நிரம்பியுள்ளது.
ஒட்டர்பாளையம் ஊராட்சியில் பூலுபாளையத்தில் உள்ள 65 ஏக்கர் குளம், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் உள்ள, 27 ஏக்கர் வையாளிபாளையம் குளம், அக்கரைசெங்கப்பள்ளி குளம், அ. மேட்டுப்பாளையத்தில் உள்ள குளம் என ஐந்து குளங்கள் நிரம்பி உள்ளன. இதையடுத்து இந்த குளங்களில் மீன் வளர்த்து விற்பனை செய்ய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒன்றிய ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அன்னூர் வட்டாரத்தில் ஐந்து குளங்களில் மீன் வளர்த்து விற்பனை செய்ய விருப்பமுள்ளவர்கள், 27ம் தேதி நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம்' என தெரிவித்துள்ளார்.