/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாசில்தார் உட்பட ஐந்து அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
/
தாசில்தார் உட்பட ஐந்து அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தாசில்தார் உட்பட ஐந்து அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தாசில்தார் உட்பட ஐந்து அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
ADDED : அக் 14, 2025 09:47 PM
சூலுார்; சூலுார் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் நான்கு பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த ஒரு வருடமாக, சூலுார் தாசில்தாராக சரண்யா பணியில் இருந்தார். இந்நிலையில், அவர் விமான நிலைய ஓடுதள நில எடுப்பு தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். கோவை வடக்கு தாலுகாவில் குடிமை பொருள் தனி தாசில்தாராக இருந்த செந்தில்குமார், சூலுார் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சூலுார் தாலுகாவில் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த சுமதி, கோவை மாநகராட்சி (தேர்தல்) துணை தாசில்தாரக மாற்றப்பட்டுள்ளார். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்த நாட்ராயன், சூலுார் தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சூலுார் வட்ட வழங்கல் அலுவலராக இருந்த ஹேமாவதி மாற்றப்பட்டு, சத்திய ஷீலா நியமிக்கப்பட்டுளளார். மண்டல துணை தாசில்தாராக இருந்த கோமதி மாற்றப்பட்டு, அம்பிகா (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். சூலுார் தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக இருந்த முத்துமாணிக்கம் மாற்றப்பட்டு, அம்பிகா துணை தாசில்தாராக நியமிக்கப் பட்டுள்ளார்.

