ADDED : ஜன 09, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பெய்த தொடர் மழையால், ஆழியாறு கவியருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதேபோன்று, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
பொள்ளாச்சி பாலாறு பகுதிகளில் நேற்று இடைவிடாமல் பெய்த மழை காரணமாகவும், சிற்றோடைகளில் வழியாகவும் நீர் வரத்து அதிகரிப்பாலும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் தரை மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால், பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை விதித்தது.
இதேபோன்று, ஆழியாறு, வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால், ஆழியாறு கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

