/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் வயதினர் நால்வர் துாக்கிட்டு மரணம்
/
இளம் வயதினர் நால்வர் துாக்கிட்டு மரணம்
ADDED : ஜூன் 13, 2025 11:12 PM
கோவை; மாநகரில் நேற்று முன்தினம், ஒரே நாளில் கல்லுாரி மாணவர் உட்பட நான்கு வாலிபர்கள் துாக் கிட்டு மரணமடைந்த நிலையில் காணப்பட்டது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
n வேலாண்டிபாளையம், ஆனந்தா ஹவுசிங் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன், 43 மகன் கபிலேஷ், 19. தனியார் கல்லுாரியில் பி.டெக் படித்து வந்தார். கடந்த, 12ம் தேதி, அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற கபிலேஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை அங்கு சென்று பார்த்தபோது, கபிலேஷ் மின்விசிறியில் துாக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
n ரத்தினபுரியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 28; மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த 11ம் தேதி அவர் தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் காலை, கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில், துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
n குனியமுத்துார், இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த அமிர்தராஜ், 49 மகன் தினேஷ் குமார், 24. தங்கப் பட்டறையில் பணியாற்றி வந்தார். கடந்த 12ம் தேதி நள்ளிரவு, மதுபோதையில் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர், தனது அறைக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது, தினேஷ் அறை கதவு பூட்டியிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தினேஷ் துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
n ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 31. சரவணம்பட்டி பகுதியில் தங்கியிருந்து டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடன் பிரச்னை இருந்ததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 12ம் தேதி நீண்ட நேரமாகியும் வீடு திறக்காததால் வீட்டு உரிமையாளர், ஜன்னல் வழியாக பார்த்த போது, மோகன்ராஜ் துாக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
நான்கு மரணங்கள் குறித்தும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.