/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடன் பெற்று தருவதாக மோசடி; பொதுமக்கள் சாலை மறியல்
/
கடன் பெற்று தருவதாக மோசடி; பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 01, 2025 10:36 PM

பெ.நா.பாளையம்; கடன் பெற்று தருவதாக மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, இடிகரையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடிகரை பேரூராட்சி துணைத் தலைவர் சேகர். தி.மு.க.,வை சேர்ந்தவர். இவரது மனைவி சுதா.
இவர் மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறி, பெண்களிடம், 8,000 ரூபாய் முதல் 13,000 வரை முன் பணமாக பெற்றுக் கொண்டார்.
கடந்த, 10 மாதங்களாக, இதுவரை கொடுத்த பணத்தை திருப்பி தரவில்லை. மேலும், கடனும் வாங்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்த பொதுமக்கள், தாங்கள் கொடுத்த பணத்தை, திருப்பி தர வேண்டும் என்றும், மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, நேற்று முன்தினம் இரவு இடிகரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், இது குறித்து உரிய புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.