/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்கள், காய்கறி ஏற்றுமதி பயிற்சி
/
பழங்கள், காய்கறி ஏற்றுமதி பயிற்சி
ADDED : செப் 15, 2025 11:32 PM
கோவை; தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (டி.என்., அபெக்ஸ்) சார்பில், 'எக்ஸாடிக்' எனப்படும் அயல் நாட்டுப் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கொடைக்கானலில் நடைபெறுகிறது.
19ம் தேதி நடைபெறும் அந்நிகழ்வில், டிராகன் பழம், வெண்ணெய் பழம், பாஷன் பழம், ஸ்டார் புரூட், மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட 'எக்ஸாடிக்' பழ வகைகள் மற்றும் காய்கறி ஏற்றுமதி செய்வது எப்படி, என்னென்ன நடைமுறை, இத்துறையில் உள்ள வாய்ப்பு, தரக்கட்டுப்பாடு சான்று பெறுவது, சிறந்த வேளாண் நடைமுறைகள், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, மதிப்புக்கூட்டல் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
ஐ.இ.சி., கோடு பெறுவது எப்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட உள்ளது. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் மன்றங்கள், வேளாண் தொழில்முனைவோர், உணவு பதனிடல் துறை 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
விவரங்களுக்கு, 70107 32591 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.