/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுத்தம் செய்த இடத்தில் மீண்டும் குப்பை வீச்சு
/
சுத்தம் செய்த இடத்தில் மீண்டும் குப்பை வீச்சு
ADDED : ஜன 17, 2024 12:12 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் அரசு பள்ளி பின்புறம் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில், மீண்டும் குப்பை கொட்டப்பட்டுள்ளதால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையத்தில், அரசுப்பள்ளி பின்புறம் உள்ள பகுதியில், ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த ரோட்டில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும், ஆட்கள் அதிக அளவு சென்று வருவார்கள்.
இந்த பள்ளியின் பின்புறம், அதிக அளவு குப்பை கொட்டப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த குப்பை அகற்றம் செய்யப்பட்டு, இந்த இடம் துாய்மைப்படுத்தப்பட்டது. மேலும், இந்த இடத்தில் இருந்த செடிகள் அகற்றப்பட்டது.
ஆனால், அதன் பின் மீண்டும் பிளாஸ்டிக் கழிவு மற்றும் காகித குப்பை அதிக அளவு கொட்டப்படுவதால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த குப்பையால் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு, துர்நாற்றம் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த குப்பையை அகற்றுவதோடு, இங்கு குப்பை கொட்டுவதற்கு பதில், வேறு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

