ADDED : ஜன 26, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையில் தேங்கியிருந்த குப்பை அகற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம்--ஊட்டி சாலையில் ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் உள்ள குப்பை தொட்டிகளில், குப்பை தேங்கி, ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாமல் இருந்தது. குப்பைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். நேற்று முன்தினம் ஊட்டி சாலையில் பயணித்தவர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்த செய்தி, தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, ஓடந்துறை ஊராட்சி சார்பாக, நேற்று அப்பகுதியில் குப்பை அகற்றப்பட்டது. தீ வைத்த மர்ம நபர்கள் தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தினர் விசாரிக்கின்றனர்.

