/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை கல்லுாரி புவியியல் துறை முன்னாள் மாணவர் ஆலோசனை கூட்டம்
/
அரசு கலை கல்லுாரி புவியியல் துறை முன்னாள் மாணவர் ஆலோசனை கூட்டம்
அரசு கலை கல்லுாரி புவியியல் துறை முன்னாள் மாணவர் ஆலோசனை கூட்டம்
அரசு கலை கல்லுாரி புவியியல் துறை முன்னாள் மாணவர் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 26, 2024 01:29 AM
கோவை;கோவை அரசு கலை கல்லுாரி, புவியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இக்கல்லுாரி, முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு, பிப்., 11ம் தேதி நடக்கவுள்ளது.
இதில், 1946ல் துறை துவங்கப்பட்டது முதல் படித்த முன்னாள் மாணவர்கள், புவியியல் துறை பேராசிரியர்கள், சாதனையாளர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இக்கூட்டம், முன்னாள் புவியியல் துறைத்தலைவர் குமாரசாமி, தற்போதைய துறைத்தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நாளை மாலை, 3:00 மணியளவில் நடைபெறவுள்ளதால் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம் என, கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.