/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடத்தில் பிரமாண்ட அசோக துாண் திறப்பு
/
உக்கடத்தில் பிரமாண்ட அசோக துாண் திறப்பு
ADDED : மே 13, 2025 07:19 AM

கோவை : கோவையில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் சிட்டி திட்டன் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், கோவை மாநகராட்சி மற்றும் ஆர் கோல்டு நிறுவனம் இணைந்து, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகில், அசோக தூண் அமைக்கப்பட்டது.
16 அடி உயரம் மற்றும் 1.5 டன் எடையில் அமைக்கப்பட்ட அசோக தூண் திறப்பு விழா, நேற்று நடந்தது. இத்தூணை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து, பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன நிகழ்ச்சி நடந்தது. ஆர் கோல்டு நிறுவனத்தின் நிறுவனர் ரங்கசாமி, தூண் வடிவமைப்பு செய்த பிளாக் ஷிப் மீடியா சதீஷ்குமார், பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

