/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு: கூடலூர் பள்ளி மாணவன் வெற்றி
/
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு: கூடலூர் பள்ளி மாணவன் வெற்றி
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு: கூடலூர் பள்ளி மாணவன் வெற்றி
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு: கூடலூர் பள்ளி மாணவன் வெற்றி
ADDED : பிப் 29, 2024 11:26 PM

ஊட்டி;கூடலுார் 'மேபீல்டு' ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன், தேசிய கல்வி உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்றார்.
மாநிலத்தில், 8 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு, கடந்த பிப்., மாதம்,3ம் தேதி நடந்தது.
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு மாதம், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்தேர்வை மாநில முழுவதும் ஏராளமான மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், கூடலுார் மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் அகில் நாசிம் என்ற மாணவன் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில்,''மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவன் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளார். உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டு,'' என்றார்.