sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தேர்தலுக்குப் பின் ஓ.பி.எஸ்., பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்'

/

'தேர்தலுக்குப் பின் ஓ.பி.எஸ்., பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்'

'தேர்தலுக்குப் பின் ஓ.பி.எஸ்., பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்'

'தேர்தலுக்குப் பின் ஓ.பி.எஸ்., பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார்'


ADDED : பிப் 11, 2024 02:34 AM

Google News

ADDED : பிப் 11, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:தேர்தலுக்கு பின், ஓ.பி.எஸ்., பா.ஜ., வில் சேர்ந்து விடுவார்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

கோவையில் அ.தி.மு.க., சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:

பா.ஜ.,வுக்கு ஆதரவாக கூலிக்கு மாரடிக்கும் பணியை, ஓ.பி.எஸ்., செய்து வருகிறார். தேர்தலுக்கு பின், அவர் பா.ஜ.,வில் இணைந்து விடுவார். அ.தி.மு.க., தலைமையில் பெரிய கூட்டணி அமையும்.

பா.ஜ., தவிர்த்து, யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணியில் இணையலாம். அ.தி.மு.க., யாரையும் கெஞ்ச வேண்டிய நிலையில் இல்லை. எங்களை நோக்கித்தான் கட்சிகள் வரும். அ.தி.மு.க.,விடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்க கூடாது என, தி.மு.க., தடுக்கிறது.

பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க., தமிழகத்துக்கு என்ன செய்தது. மாநில உரிமைகளுக்காக பாடுபட்டது அ.தி.மு.க.,தான். கட்சத்தீவை தீவை தாரை வார்த்தது தி.மு.க.,

பொது சிவில் சட்டத்தை அ.தி.மு.க., எதிர்க்கும். சிறுபான்மை மக்களுக்கு, நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். அண்ணாமலை பல கருத்துக்களை தேவையில்லாமல் கூறி மாட்டிக்கொள்கிறார். அ.தி.மு.க., வுக்கு தி.மு.க., எப்படி பகையாளியோ, அதேபோல், அரசியலில் பா.ஜ., வும் பகையாளிதான்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar