/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யாருக்காவது காய்ச்சல் இருந்தால் சொல்லுங்கள் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

ADDED : ஜூன் 01, 2025 06:44 AM
கோவை : மழைகால நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகள் குறித்த தகவல்களை வழங்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, மாவட்ட சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழையளவு பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக, மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அசுத்த நீரால் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, இது போன்ற பாதிப்புகள் குறித்த தகவல்களை வழங்க, மாவட்ட சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதார துறை ஊழியர்கள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அரசு மற்றும், தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும், காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இல்லை. காய்ச்சல் கண்காணிப்பில், பேரூராட்சிக்கு, 10, வட்டாரத்துக்கு, 20 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொசுப்புழு உற்பத்தி குறித்து கண்காணித்து, ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொசு மருந்து தெளித்தல், புகையடித்தல் பணிகளையும் மேற்கொள் கின்றனர். இதுதவிர, வயிற்றுபோக்கு குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.