/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு மனைகள் விற்பனை திருவிழா
/
வீட்டு மனைகள் விற்பனை திருவிழா
ADDED : ஜூன் 16, 2024 02:04 AM

பொள்ளாச்சி:கோவையில் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்டார் புரமோட்டர்ஸ், பொள்ளாச்சியில் வீட்டு மனைகள் விற்பனை திருவிழா துவங்கியுள்ளது.
பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி மீன்கரை ரோட்டில், 15 ஏக்கரில் இந்நிறுவனத்தின் சார்பில், அழகிய பசுமையான சூழலில் வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெட்ரூம் உடன் கூடிய வீட்டினை, 29 லட்சம் ரூபாய் முதல் மற்றும் ஒரு சென்ட் இடம் 8.25 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இடத்தின் அருகே, 850 மீட்டரில் பள்ளிக்கூடமும், 2 கி.மீ., தொலைவில் பஸ் ஸ்டாண்ட், 3 கி.மீ.,ல் ரயில்வே ஸ்டேஷன், மற்றும் மருத்துவமனைகள், என ஏராளமான வசதிகளுடன் கூடிய பகுதியில், 'ஸ்டார் ஜேஜே பிரின்ஸ் சிட்டி' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடு வாங்க, எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் ஹவுசிங் நிறுவனம், ஆக்சிஸ், எச்.டி.எப்.சி., உள்ளிட்ட நிறுவனங்களில் கடன் வசதி செய்து தரப்படுகிறது.
இதன் துவக்க விழாவில், புதிய வீட்டுமனையை ஸ்டார் புரமோட்டர்ஸ் அண்ட் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.