/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆய்வு
/
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆய்வு
ADDED : மே 26, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார்.
செல்வசிந்தாமணி குளத்தில் மதகுகள் வழியே உபரிநீர் வெளியேற்றப்படுவதையும், கால்வாய் துார்வாரப்படுவதையும் பார்வையிட்ட அவர், நீர் வரத்து, இருப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பேரூர் ரோடு, ஆண்டிப்பாளையம் பிரிவு அருகே நொய்யல் ஆற்றிலிருந்து ராஜவாய்க்கால் வழியாக உக்கடம் குளத்துக்கு உபரிநீர் வெளியேற்றப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.