/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
/
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
ADDED : மார் 25, 2025 06:20 AM

கோவை; மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு, கோவைப்புதுார், அறிவொளி நகர், நஸ்ரூல் சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசலில் நடந்தது.பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கவுரி சங்கர் தலைமை வகித்தார்.
இதில், நுாறுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவியாக அரிசி, மளிகைப்பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய, ரமலான் பரிசுகள்வழங்கப்பட்டன.
சமூக சேவகர் பர்கத் பாஷா, 86வது வட்ட மாமன்ற உறுப்பினர்அஹமது கபீர், லயன்ஸ் கிளப் ஆப் தி கிரேண்ட் தலைவர் அகஸ்டின், கத்தோலிக்க தேவாங்கர் நலச்சங்க செயலாளர் பாபுநலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாகிகள் தமிழரசன், நாகராஜ், சரவணன் மற்றும் லட்சிய துளி மக்கள் அமைப்பின்நிறுவனர் தினேஷ்குமார்,நிர்வாகிகள் ரெக்ஸ், ரஞ்சித், லியாண்டர் ஆகியோர் பங்கேற்றனர்.