/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து சிரமமின்றி பொதுமக்கள் பயணம்
/
கோவையில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து சிரமமின்றி பொதுமக்கள் பயணம்
கோவையில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து சிரமமின்றி பொதுமக்கள் பயணம்
கோவையில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து சிரமமின்றி பொதுமக்கள் பயணம்
ADDED : ஜன 10, 2024 12:41 AM

கோவை:ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் 'ஸ்டிரைக்' அறிவித்தும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கியதால், கோவையில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
அரசு போக்குவரத்துக்கழகத்தில், சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம் உட்படபல்வேறு தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகை வழங்குதல், கருணை அடிப்படையில் வேலை என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
கோவை மண்டலத்தில் உள்ள, 17 பஸ் டிப்போக்களில், 602 டவுன் பஸ்கள், 349 வெளியூர் பஸ்கள் என, 951 பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன. இதில், 581 பஸ்கள் நேற்று காலை முதல் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணி நிமித்தமாக செல்வோர் எந்த வித பாதிப்புமின்றி பயணித்தனர்.
காந்திபுரம், சிங்காநல்லுார், உக்கடம் பஸ் ஸ்டாண்ட்களில் திருப்பூர், மதுரை, திருச்சி, சத்தி, பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட வெளியூர் பஸ்களும் பெரும்பாலான எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால், வெளியூர் பயணிகளுக்கும் ஸ்டிரைக்கால் பாதிப்பில்லை.
சுங்கம் டிப்போ நுழைவாயிலில் அமர்ந்து சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கத்தினர்சிலர் சட்டையை கழற்றி, அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
ரெட் பஸ்களே அதிகம்
'ரெட்' பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டன. வாளையார் செல்லும் ரெட் பஸ் ஒன்றில், குறிப்பிட்ட ஸ்டாப்களில் மட்டுமே பஸ்கள் நிற்கும் என, கண்டக்டர்கூறியதால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தற்போது, பாதிப்புகள் தவிர்க்கப்பட்டாலும்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென,அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

