/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டுச்சந்தையில், ரூ.6.3 கோடியில் 'ஷெட்' நவீனப்படுத்த பணிகள் தீவிரம்
/
மாட்டுச்சந்தையில், ரூ.6.3 கோடியில் 'ஷெட்' நவீனப்படுத்த பணிகள் தீவிரம்
மாட்டுச்சந்தையில், ரூ.6.3 கோடியில் 'ஷெட்' நவீனப்படுத்த பணிகள் தீவிரம்
மாட்டுச்சந்தையில், ரூ.6.3 கோடியில் 'ஷெட்' நவீனப்படுத்த பணிகள் தீவிரம்
ADDED : ஜன 17, 2024 12:16 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான காந்தி வாராந்திரச்சந்தை, 30.78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, ஆடுவதை செய்யுமிடம், லாரிப்பேட்டை, தினசரி காய்கறி மொத்த வியாபார அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதில், 10 ஏக்கர் பரப்பளவில், மாட்டுச்சந்தை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. மாட்டுச்சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வெளி நகரங்களிலிருந்து பல்வேறு ரகங்களை சேர்ந்த மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. மாட்டுச்சந்தையில், செவ்வாய் கிழமையில், நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன.
இந்த சந்தையில், வாரம்தோறும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்லும் மாட்டுச்சந்தையில், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும் என, மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மாட்டு சந்தையில் மாடுகள் நிறுத்தம் செய்ய, 'ெஷட்' அமைக்கும் பணி நடக்கிறது.
மாட்டு வியாபாரிகள் கூறுகையில், 'மாட்டு சந்தையில் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என அமைச்சர் நேருவிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அதன்படி, தற்போது, ஏழு ெஷட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
மொத்தம், 150 மாடுகள் நிற்கும் வகையில், ெஷட் அமைக்கப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் மாடுகள் நனையாமல் நிற்க வைக்க முடியும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி மாட்டு சந்தையில், ஆறு கோடியே, மூன்று லட்சம் ரூபாய் செலவில், வாகனங்கள் நிறுத்தி மாடுகளை இறக்க, ரேம்ப் வசதி, மாடுகள் நிறுத்த ஷெட், குடிநீர் வசதி, மாட்டுச்சாணத்தை சேகரித்து வைக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நவீனப்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

