/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு: மிஷின் வாயிலாக இலை பறிப்பு
/
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு: மிஷின் வாயிலாக இலை பறிப்பு
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு: மிஷின் வாயிலாக இலை பறிப்பு
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு: மிஷின் வாயிலாக இலை பறிப்பு
ADDED : பிப் 01, 2024 11:15 PM

வால்பாறை;வால்பாறையில், பருவமழைக்கு பின் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், இயந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில், மொத்தம், 32,825 ஹெக்டேரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் தேயிலை மட்டும், 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
வால்பாறையில், தற்போது கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் தேயிலை செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைத்தது. பருவமழைக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டுள்ளதால், உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, எஸ்டேட் பகுதியில் தொழிலாளர் பற்றாக்குறையால் தேயிலை பறிக்க முடியாத நிலையில், நவீன இயந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது.
மேலும், பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பால், காலை, மாலை வேளையில் தொழிலாளர்களுக்கு 'இன்சென்டீவ்' அடிப்படையில் கூடுதல் நேரம் பணி வழங்கப்படுகிறது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பருவமழைக்கு பின், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன இயந்திரம் வாயிலாக தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது. 30 தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில், மிஷின் வாயிலாக தேயிலை பறிப்பதால், 6 தொழிலாளர்களை கொண்டு தேயிலை பறிக்கப்படுகிறது.
மட்டக்காடுகளில் மட்டுமே இது போன்ற மிஷின்களை கொண்டு தேயிலை பறிக்க முடியும். மலைச்சரிவு, மேடு பள்ளமான இடங்களில் தொழிலாளர்கள் கத்திரிவெட்டு வாயிலாக தேயிலை பறிக்கின்றனர்.
இவ்வாறு, கூறினர்.

