/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: கவர்னர் ரவி பேச்சு
/
இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: கவர்னர் ரவி பேச்சு
இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: கவர்னர் ரவி பேச்சு
இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல: கவர்னர் ரவி பேச்சு
ADDED : ஜூன் 08, 2024 01:59 PM

கோவை: இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
கோவையில் நடந்த கருத்தரங்கில் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் மிகைப்படுத்துதல், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே உள்ளன. இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை. இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல.
ஒளி...!
ஆங்கிலேயர் வரும் முன்பு வரை நூற்றாண்டுகளாக பாரத் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பாரத் என்றால் ஒளி. பாரத் என்பதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புரிந்து கொள்ள முடியும். இந்தியா என்பது பாரத் என்பதை ஒத்த அர்த்தமல்ல. பாரத் என்பதை இந்தியா எனும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.