/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை, பணம் கொள்ளை விவகாரம் தனிப்படை அமைத்து விசாரணை
/
நகை, பணம் கொள்ளை விவகாரம் தனிப்படை அமைத்து விசாரணை
நகை, பணம் கொள்ளை விவகாரம் தனிப்படை அமைத்து விசாரணை
நகை, பணம் கொள்ளை விவகாரம் தனிப்படை அமைத்து விசாரணை
ADDED : ஜன 27, 2024 02:27 AM
கோவை :பெண்களை கட்டிப்போட்டு 37 பவுன் நகை பணத்தை கொள்ளையடித்தது ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலா என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்தவர் கமலேஷ் 50. கோவை ஆர்.எஸ்.புரத்தில் தங்கி மொத்த பருத்தி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மருதமலை கோவிலுக்கு சென்றிருந்தபோது அவரது வீட்டிற்குள் புகுந்த 10க்கும் மேற்பட்ட கொள்ளையர் மனைவி ரூபல் மகன் மிகர் மற்றும் வேலைக்கார பெண்ணை அரிவாள் கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர்.
பின் அங்கிருந்த ரூ.9 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது: பட்டப்பகலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களின் கார்கள் சரவணம்பட்டி வழியாக சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
இதேபோன்று சேலம் திருப்பூர் உட்பட பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஹவாலா பணத்தை குறி வைத்து கொள்ளை அடிப்பவர்களின் விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை அடிக்க வந்தவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசி உள்ளனர். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பல் இல்லை என உறுதியாகி உள்ளது.
கொள்ளையர்களின் சில தடயங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. விரைவில் கைது செய்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

