/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா யோகா வகுப்பு நாளை துவக்கம்
/
ஈஷா யோகா வகுப்பு நாளை துவக்கம்
ADDED : மே 19, 2025 11:12 PM
அன்னுார்; கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், ஈஷா யோக மையம் செயல்படுகிறது. ஈஷா யோகா வகுப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அன்னுாரில், நாளை (21ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கே.ஜி. மெட்ரிக் பள்ளியில் அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. அறிமுக வகுப்பு இலவசம்.
இதன் பின்னர், 27ம் தேதி வரை, தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரையும், மாலையில் 6:00 மணி முதல், இரவு 8:30 மணி வரையும், வகுப்புகள் நடைபெறும்.
விரும்பும் வகுப்பில் பங்கேற்கலாம். இதில் சாம்பவி மகாமுத்ரா கற்றுத் தரப்படுகிறது. மூச்சுப் பயிற்சி, தியானம், எளிய உடற்பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுவதன் மூலம் மனம் குவிப்புத் திறன் அதிகரிக்கும். மனதில் தெளிவு ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 'மேலும் விவரங்களுக்கு 63808 78456 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.