/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2025 09:48 PM
அன்னுார்; 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலுகா அலுவலகங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி, பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16ம் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அன்று மாலை அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநில அளவில் கோரிக்கை விளக்கப் பிரச்சாரம் நடைபெறுகிறது.
நவ. 18ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தமும், இதன் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

