/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவர் வீட்டில் நகை திருட்டு; பணியாளர்கள் இருவர் கைது
/
முதியவர் வீட்டில் நகை திருட்டு; பணியாளர்கள் இருவர் கைது
முதியவர் வீட்டில் நகை திருட்டு; பணியாளர்கள் இருவர் கைது
முதியவர் வீட்டில் நகை திருட்டு; பணியாளர்கள் இருவர் கைது
ADDED : ஜூன் 07, 2025 01:16 AM
கோவை; முதியவர் வீட்டில் இருந்து, 36 சவரன் தங்க நகைகளை திருடிய பணியாளர்கள் இருவரை , போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோட்டை சேர்ந்தவர் சிவசுப்ரமணியம், 90. இவரது வீட்டு வேலைகளை செய்வதற்காக வீரகேரளம் பகுதியை சேர்ந்த கவிதா, 38 மற்றும் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 53 ஆகியோரை கடந்த பிப்., மாதம் பணியமர்த்தினார்.
இருவரும் வேலைக்கு சேர்ந்து சில நாட்களில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள் சிறிது, சிறிதாக மாயமாகியுள்ளன. சிவசுப்ரமணியம் கடந்த மே 26ம் தேதி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, வீட்டில் வேலை செய்த வந்த கவிதா, ராஜேந்திரன் ஆகியோர் நகைகளை திருடியிருப்பது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் விசாரித்த போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளை பிப்., மாதம் முதல் மே மாதம் வரை சிறிது சிறிதாக சுமார், 36 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. கவிதா, ராஜேந்திரன் ஆகியோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.