ADDED : ஜூன் 24, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். கம்பன் கலைக்கூடத்தின் தலைவர் டாக்டர் சுப்ரமணியன், 'இலக்கியமும் மருத்துவமும்' என்ற தலைப்பில், தமிழ் இலக்கியத்தில் உள்ள மருத்துவம் சார்ந்த குறிப்புகள், அறநெறி சார்ந்த கருத்துக்கள், இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் தேவையான வாழ்வியல் முறைகள், அறிவியல் கருத்துக்களையும் எடுத்துக்கூறினார்.
விழாவில், பள்ளி கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, உஷாராணி மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.