/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து சித்ரவதை
/
ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து சித்ரவதை
ADDED : ஜூலை 25, 2024 07:12 AM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் தனியார் நிறுவனங்களின் 20க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒரு பஸ் நிறுவன அலுவலகத்தில் காரைக்குடியைச் சேர்ந்த டிரைவரின் இரு கைகளையும் பின்புறமாக ஜன்னலில் கட்டி வைத்து மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர்.
அதில், டிரைவரிடம் 'நீ என்னென்ன செஞ்சேனு சொல்லிடு. எங்கிருந்து எவ்வளவு டிக்கெட் ஏத்துன. இனி உன்னை மதுரையிலே பார்க்கக்கூடாது' என மிரட்டிய நபரிடம், 'அண்ணே, திருப்பதியில் இருந்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் போட்டு 4 பேரை ஏற்றினோம். 2,200 ரூபாய் வாங்கினோம்' எனக்கூறி கெஞ்சி அழுதவாறே கூறுகிறார்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் கூறுகையில், 'மிரட்டிய நபர் தலைமறைவாகி விட்டார். டிரைவரும் வேலையை விட்டு நீக்கப்பட்டதால், எங்கு சென்றார் எனத் தெரியவில்லை' என்றனர்.