/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவோயிஸ்ட் தீபக் ஆஜர்; சாட்சி விசாரணை ஒத்திவைப்பு
/
மாவோயிஸ்ட் தீபக் ஆஜர்; சாட்சி விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:43 PM
கோவை; கோவை கோர்ட்டில், மாவோயிஸ்ட் தீபக் மீதான வழக்கு விசாரணை, வரும் 22 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக - கேரளா எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அதிரடிப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். 2019, நவ., 9 ல் , ஆனைகட்டி, அட்டப்பாடி பகுதியில் கேரள அதிரடிபடைக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர், சுட்டு கொல்லப்பட்டனர். இதில், காயமடைந்த மாவோயிஸ்ட் தீபக் மற்றும் பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி ஆகியோர் அங்கிருந்து தப்பினர். ஆனைகட்டி பகுதியில் பதுங்கியிருந்த தீபக், நவ., 12ல் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து 'கியூ' பிராஞ்சிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தீபக் மீது, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த போது, தீபக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைதொடர்ந்து சாட்சி விசாரணைக்கு, வரும், 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.