/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தினம்
/
மேம்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தினம்
ADDED : ஜன 26, 2024 12:50 AM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் -- குப்பிச்சிபாளையம் ரோட்டில், தேசிய மனித மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.
மையத்தில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கருத்தரங்கு, பேச்சுப் போட்டி, வினாடி - வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பயிற்சியாளர்கள், ரோட்டரி சமுதாய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மைய இயக்குனர் சகாதேவன் மேற்கொண்டார்.

