/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவராத்திரி கொலுவால் வீடுதோறும் பக்திமணம்; பாரம்பரியம் காக்கும் தினமலர் வாசகியர்
/
நவராத்திரி கொலுவால் வீடுதோறும் பக்திமணம்; பாரம்பரியம் காக்கும் தினமலர் வாசகியர்
நவராத்திரி கொலுவால் வீடுதோறும் பக்திமணம்; பாரம்பரியம் காக்கும் தினமலர் வாசகியர்
நவராத்திரி கொலுவால் வீடுதோறும் பக்திமணம்; பாரம்பரியம் காக்கும் தினமலர் வாசகியர்
ADDED : செப் 27, 2025 01:11 AM

கோவை; தினமலர் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு விசிட் பீளமேடு, சேரன்மாநகர் மற்றும் நேருநகர் பகுதியில் நேற்று நடந்தது. தினமலர் குழுவினர் விசிட் செய்தனர். ஒவ்வொரு வீடும் அழகிய கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தி கீதங்கள் ஒலிக்க தெய்வீகத் தன்மையுடன் காட்சி அளிக்கின்றன.
தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள மான்செஸ்டர் அபார்ட்மென்டில் அனைவரும் இணைந்து வைத்துள்ள கொலு கவர்கிறது. காலை, மாலை இருவேளையும் பூஜை மற்றும் பஜனைகள் செய்து வருகின்றனர்.
லட்சுமி சிவராமகிருஷ்ணன், பீளமேடு எங்கள் குடும்ப வழக்கப்படி 70 ஆண்டுகளாக நவராத்திரி கொலு வைத்து வருகிறோம். கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணன் பிறப்பில் துவங்கி, கம்சனை வதம் செய்து விஸ்வரூப காட்சி தருவது வரை வைத்து இருக்கிறோம்.
பத்மினி, பாரதிகாலனி பீளமேடு எங்கள் வீட்டுக்கொலுவில் வைக்கப்பட்டுள்ள, எல்லா பொம்மைகளும் தெர்மாகோலில் செய்யப்பட்ட பொம்மைகள். கடவுள் உருவங்களை நாமே செய்து கொலுவில் வைக்கும் போது அதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றன.
ஜெயலட்சுமி, துரைசாமி லே-அவுட் பீளமேடு நாம் இந்து சனாதன தர்மங்களை பாதுகாக்க வேண்டும் என்றால், நவராத்திரி கொலு போன்ற பண்டிகைகளை தவறாமல் கொண்டாட வேண்டும். பழமைகளையும், பண்பாட்டையும் மறந்து விடாமல் இருக்க, குழந்தைகளுக்கு இதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஜெகதீஸ்வரி, முருகன்நகர் பீளமேடு அம்பாளின் அனுக்கிரகம் இல்லத்தில் நிறைந்து இருக்கிறது. மனதில் நிம்மதி இருக்கிறது. என் அம்மாவை தொடர்ந்து நானும், கொலு வைத்து வருகிறேன். இதை என் குழந்தைகளும் பிற்காலத்தில் தொடர்வார்கள்.
பிரேம லதா, தண்ணீர் பந்தல், பீளமேடு என் அம்மா, மாமியாரை தொடர்ந்து 40 வருடமாக வீட்டில் கொலு வைத்து வருகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும் போது, '16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவார்கள். அதை விளக்கும் விதமாக, இந்த ஆண்டு கொலு வைத்து இருக்கிறேன்.
சாவித்திரி, மான்செஸ்டர் அபார்ட்மென்ட், தண்ணீர் பந்தல் நவராத்திரி பண்டிகை என்பது, நாம் பாரம்பரியமாக கொண்டாடி வரும் விழா. இந்து தர்மம் நிலைத்து இருக்க வேண்டும் என்றால், நவராத்திரி பண்டிகையை மக்கள் மறக்காமல் கொண்டாட வேண்டும்.
இந்த நவராத்திரி கொலு விழா கொண்டாட்டத்தை தினமலர் நாளிதழுடன் மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயுர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. தினமலர் குழுவினர் இன்று, ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லுார் பகுதிக்கு கொலு விசிட் செய்கின்றனர்.

