தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேட்புமனு விண்ணப்பம் நேற்று முதல் வினியோகம்

 வேட்புமனு விண்ணப்பம் நேற்று முதல் வினியோகம்

 வேட்புமனு விண்ணப்பம் நேற்று முதல் வினியோகம்


ADDED : மார் 19, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், நேற்றுமுதல் வேட்பு மனு விண்ணப்பங்கள் வினியோகப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியில், சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிகாரிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்கள் வினியோகிக்கும் பணிகள் நேற்று துவங்கப்பட்டன.

ஒரு வேட்பாளருக்கு நான்கு வேட்பு மனு விண்ணப்பங்கள் வரை வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மட்டும் வேட்பு மனு வாங்கிச் சென்றார். அலுவலக நேரத்தில் விண்ணப்பத்துக்கு ஒரு ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us