/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீழ்ப்படிதல்தான் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு முதல் படி!
/
கீழ்ப்படிதல்தான் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு முதல் படி!
கீழ்ப்படிதல்தான் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு முதல் படி!
கீழ்ப்படிதல்தான் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு முதல் படி!
ADDED : ஜன 27, 2024 11:14 PM

குனியமுத்தூரிலுள்ள நிர்மல மாதா மெட்ரிக் பள்ளியின், 31ம் ஆண்டு விழா நடந்தது.
ஞானபுரம் சாலையிலுள்ள பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, முன்னாள் மாவட்ட நீதிபதி முஹமது ஜியாபுதீன் தலைமை வகித்து பேசுகையில், இன்றைய மாணவர்கள், ஆசிரியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்புவதில்லை. ஆசிரியர் தங்களை கண்டிக்க கூடாது எனும் மனநிலையில் செயல்படுகின்றனர். இது தவறாகும்.
மாணவர்கள், ஆசிரியருக்கு கீழ்ப்படிதலே வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் படியாகும். வாழ்க்கைக்கு பயனில்லாத செயல்களில் ஆர்வம் கூடாது, என்றார்.
முன்னதாக ராமநாதபுரம் திருமண்டல பிஷப் மார் பவுல் அலபட், விழாவினை துவக்கி வைத்தார். அருட்சகோதரி ரோஸ்லின் மூத்தேடன், பங்கு தந்தை ஜெய்ஸன் சோத்திரக்கொட்டு உள்ளிட்டோர் பேசினர். பரிசு வழங்கல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். முதல்வர் ரோஸ்லின் புல்லேலி மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.