/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுப்பொலிவுக்கு பூங்காக்கள் காத்திருப்பு: மதிப்பீடு தயாரிக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு

ADDED : ஜன 10, 2024 12:44 AM
கோவை:பூங்காக்களை பராமரிக்கமதிப்பீடு தயாரிக்குமாறு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு இரு மாதங்களாகியும், அதிகாரிகளின் மெத்தனத்தால் குழந்தைகள் குதுாகலிக்க முடியாததுடன், விளையாடுமிடங்களில் காயங்களும் ஏற்படுகின்றன.
2010ம் ஆண்டு நடந்த செம்மொழி மாநாடு சமயத்தில், 50க்கும் மேற்பட்ட செம்மொழி பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
இத்துடன் சேர்த்து சுமார், 300க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ள நிலையில், பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன.
குழந்தைகள் பூங்காக்களில் சறுக்கி விளையாடும் இடத்தில், மணல் இல்லாமல், கருங்கல்லாகவும், சிமென்ட் கற்களாகவும் உள்ளதால், குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிறது.
இதர பூங்காக்களில் கழிவறை, மோசமான நிலையில் காம்பவுண்ட் சுவர், பெயின்ட் பூச்சு இல்லாத அவலங்களால், பொது மக்கள் பொழுது போக்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது. புதர்மண்டிய பூங்காக்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.
மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
இரு மாதங்களுக்கு முன், 100 வார்டுகளிலும் இருக்கும் பூங்காக்களை பராமரிக்க மதிப்பீடு தயாரிக்குமாறு, மண்டல உதவி கமிஷனர்கள், உதவி நிர்வாக பொறியாளர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இதுவரை மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை. கடந்த மாமன்ற கூட்டத்தில் இதுகுறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்ப, அரசிடம் இருந்து நிதி கிடைத்துவிட்டால் அனைத்து பூங்காக்களும் பராமரிக்கப்படும் என, கமிஷனர் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.