/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே நாளில் வந்த 1,152 மனுக்கள் பதிவதற்கு அலுவலர்கள் திணறல்
/
ஒரே நாளில் வந்த 1,152 மனுக்கள் பதிவதற்கு அலுவலர்கள் திணறல்
ஒரே நாளில் வந்த 1,152 மனுக்கள் பதிவதற்கு அலுவலர்கள் திணறல்
ஒரே நாளில் வந்த 1,152 மனுக்கள் பதிவதற்கு அலுவலர்கள் திணறல்
ADDED : செப் 21, 2025 05:36 AM

அன்னுார் : அன்னுார் பேரூராட்சி பகுதி மக்களுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது.
குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயபாரதி துவக்கி வைத்தார். அன்னுார் தாலுகாவிலேயே அதிகபட்சமாக 1,152 மனுக்கள் பெறப்பட்டன. மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் உரிமைத் தொகை கோரி, 651 மகளிர் மனு அளித்தனர். புதிய ரேஷன் கார்டு, நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கும் பலர் மனு அளித்தனர்.
அதிக மனுக்கள் வந்ததால், பதிவு செய்ய முடியாமல், அலுவலர்கள் திணறினர். மாலை 4 மணிக்கு மேல் வந்த மக்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மீண்டும் ஒரு முகாம் நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணை தலைவர் விஜயகுமார், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.